நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, அதிமுக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறியதற்கான தெளிவான விளக்கத்தை நேற்றைய நாங்கள் அளித்து விட்டோம். அதனால் மீண்டும் மீண்டும் அதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. எங்களுடைய இலக்கு மற்றவர்களை குறை சொல்வதை விட, நாங்கள் ஜெயிக்கும் தொகுதிகளில் மக்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் அனைத்து நல்ல விஷயங்களையும் செய்து நிச்சயமாக எங்களுடைய தொகுதிகளை முன்னேற்றுவோம்.
கண்டிப்பாக நாங்கள் பலமாக இருக்கின்றோம் என நம்புகிறேன். நாங்கள் போட்டியிடுவது 60 தொகுதிகளில். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழகத்தில் இருக்கின்ற 234 தொகுதியிலும் பலமான ஒரு கட்சியாக தான் இருக்கிறது. அனைத்து இடங்களிலுமே கிராமங்கள் வரைக்கும் கிளைக் கழகங்கள் இருக்கின்ற ஒரு மாபெரும் இயக்கமாக தான் இன்றைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் இருக்கிறது. அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.
கொரோனா காலகட்டம் என்பதால் எல்லா இடத்திலும் கூட்டம் சேர விடாமல் தடுக்கிறார்கள், அதனால் தான் கூட்டம் சேரவில்லை. மே இரண்டாம் தேதி ரிசல்ட் வரும்போது நீங்கள் எல்லோரும் பார்ப்பீர்கள் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.