Categories
மாநில செய்திகள்

நாங்கள் வந்தால்தான் மாற்றங்கள் நடக்கும்…. ஊழல் இல்லாத ஆட்சிதான் பா.ஜ.க…. அர்ஜுன் சம்பத் உறுதி…!!!

பா.ஜ.க ஆட்சியில் ஊழல் இல்லை என இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் கூறியுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோட்டில் தனியார் திருமண மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் திறப்பு விழாவிற்கு இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் வருகை புரிந்திருந்தார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களுக்கு அர்ஜுன் சம்பத்  பேட்டி அளித்தார். அவர் தமிழகத்தில் தி.மு.கவா, அ.தி.மு.கவா, பா.ஜ.கவா, தேசியமா, திராவிடமா, ஊழலா என்கிற பிரச்சனைகள் தான் தற்போது இருக்கிறது. இன்று தமிழகம் டாஸ்மாக் மாநிலமாக மாறியுள்ளது. இதற்கு முன்னால் ஆட்சி செய்தவர்கள் 10% கமிசன் வாங்கிக் கொண்டிருந்த நிலையில், தற்போது ஆட்சி செய்பவர்கள் 20% கமிஷன் வாங்குகின்றனர். இப்படி இருந்தால் எப்படி தொழில் முனைவோர்கள் வருவார்கள்.

இதனையடுத்து நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என ஒருபக்கம் போராட்டம் நடந்து கொண்டிருக்க, ஐயா அப்துல் கலாமின் கனவு திட்டமான நியூட்ரினோ திட்டத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படி முன்னேறுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் முடக்குவதற்கான வேலைகளை செய்பவர்கள் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் மூலம் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலை மாறி தமிழகம் வளர்ச்சிப் பாதையை அடைய வேண்டும் என்றால், அதற்கு பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும். அதன்பிறகு கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். மேலும் ஊழல் இல்லாத ஒட்டுமொத்தமான மாற்றங்கள்தான் பா.ஜ.க என கூறியுள்ளார்.

Categories

Tech |