திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் வேட்பாளர் கைப்பற்றியுள்ளார்.
திருநெல்வேலியில் மொத்தமாக 5 சட்டமன்ற தொகுதியுள்ளது. இதில் நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 2,77,578 வாக்காளர்கள் உள்ளனர். அதில் தேர்தல் நாளன்று 1,93,137 வாக்குகள் பதிவாகியது. இத்தொகுதியில் அ.ம.மு.க நாம் தமிழர், காங்கிரஸ், அ.தி.மு.க கட்சிகள் உட்பட மொத்தமாக 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிலும் காங்கிரஸ் கட்சிக்கும், அ.தி.மு.க கட்சிக்கும் தான் கடுமையான போட்டி நிலவி வந்தது.
இந்த நிலையில் வாக்குகள் எண்ண தொடங்கிய முதல் 3 சுற்றுகளிலும் அ.தி.மு.க வேட்பாளரான தச்சை கணேசராஜா முன்னிலை பெற்றார். ஆனால் 4 ஆவது சுற்றிலிருந்தே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்ததை தொடர்ந்து, இறுதியாக 75,902 வாக்குகளை தன் வசப்படுத்திய அவர் வெற்றி பெற்றார். இதனையடுத்து அ.தி.மு.க வேட்பாளருக்கு 59,416 வாக்குப்பதிவுகள் கிடைத்துள்ளன.