Categories
உலக செய்திகள்

நாங்க அமைதியை விரும்புகிறோம்…. இந்தியா-பாகிஸ்தான் ஒற்றுமையா இருக்கணும் – பிரதமர் இம்ரான் கான்.

இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகள் அனைத்திற்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது

இந்தியாவுடன் நீண்ட காலமாகத் தொடரப்பட்ட வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதன்படி பிப்ரவரி 24 நள்ளிரவில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குனர்களான டி ஜி எம் ஓ ஹாட்லைன் மூலம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தியதில். எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் அமலில் இருக்கும் அனைத்து சண்டை நிறுத்த ஒப்பந்தங்களையும் வலிமையாக கடைப்பிடிப்பதாக இரு நாடுகளின் தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டது.

 

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவுகள் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சிரழிந்து வந்த நிலையில் தற்போது நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள சுமூக முடிவு சர்வதேச அளவில் வரவேற்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை இந்தியாவிலும் வரவேற்கப்பட்டுள்ளது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்த வரவேற்ப்பை பற்றி நேற்று அறிக்கை விடுத்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் முகாம்களின் மீது இந்தியா விமானப்படை மூலம் தாக்கியுள்ளது.

 

இத்தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் மீண்டும் சண்டை நிறுத்தம் விதிமுறை அமல்படுத்தப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். எப்போதும் நாங்கள் அமைதியையே வேண்டுகிறோம். சிறைபிடிக்கப்பட்ட விமானியை திருப்பி அனுப்பி வைத்து எங்களின் பொறுப்பான செயலை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளோம். இந்தியாவுடன் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் சுமூக தீர்வு கண்டு முன்னேறிச் செல்ல நாங்கள் தயாராக உள்ளோம். அதனால் இரு தரப்பு உறவுகள் இடையே முன்னேற்றம் காண செயல்படுத்தும் சூழலை உருவாக்கும் பொறுப்பு இந்தியாவிடமே உள்ளது.

Categories

Tech |