திமுக ஆட்சிக்கு வந்தால் பயிர் கடன் ரத்து செய்யப்படும் என கட்சியின் தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தங்கள் பிரச்சாரங்களை ஒவ்வொரு கட்சியினரும் தொடங்கி மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
தமிழக அரசு பொங்கல் பரிசு 2500 ரூபாய் அறிவித்தது ஓட்டுகளை பெறும் யுத்தி என திமுக புலம்பி வந்த நிலையில் தற்போது ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை கைப்பற்றினால் பயிர் கடை அனைத்தும் ரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த வாக்குறுதி ஆனது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.