NSO நிறுவனத்தின் தொழில்நுட்ப மென்பொருளை எஃப்.பி.ஐ சோதனை செய்து பார்த்துள்ளது.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி. ஐ தெரிவித்துள்ள அறிக்கையில் இஸ்ரேலின் ஹேக்கிங் தொழில்நுட்ப மென்பொருளை சோதனை செய்து பார்த்தோம். ஆனால் அதனை எந்த ஒரு விசாரணைக்கும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் NSO குரூப் நிறுவனம் சர்ச்சைக்குரிய பெகாசஸ் என்ற மென்பொருளை உருவாக்கி உள்ளது. இந்த ஹேக்கிங் மென்பொருளின் மூலம் தீவிரவாதிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் கொடூர குற்றவாளிகளை பிடிக்க உதவும் வகையில் உருவாக்கியதாக NSO நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் NSO நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.இதில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் தொழில் வர்த்தகத்துறை இந்நிறுவனத்தை சென்ற ஆண்டே கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.