அணு ஆயுதப் போரை தவிர்ப்பது போன்ற பல முக்கிய காரணங்களை முன்னிட்டு அதன் தயாரிப்பில் முதன்மையாக இருக்கும் அமெரிக்கா உட்பட 5 நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அணு ஆயுத தயாரிப்பில் முதன்மையாக உள்ளது. ஆகையினால் திடீரென நாடுகளுக்கிடையே போர் ஏதேனும் ஏற்பட்டால் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என்ற அச்சம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் அணு ஆயுத போரில் ஈடுபட மாட்டோம் என்ற கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில் அணு ஆயுத போட்டியினால் அனைவரிடத்திலும் ஏற்படும் அச்சத்தை குறைப்பதற்காகவும் இது தொடர்பான எந்தவித போரிலும் ஈடுபட மாட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமின்றி இந்த அணு சக்தியின் பயன்பாடு நீண்ட கால பின் விளைவுகளை ஏற்படுத்துவதே இந்த கூட்டு அறிக்கையின் முக்கிய காரணமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.