Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாங்க இருக்கோம்… அச்சமில்லாமல் வாக்களியுங்கள்… துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு..!!

திண்டுக்கல் கொடைக்கானலில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் துணை ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் துணை ராணுவப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் துணை ராணுவ படையினரும், காவல்துறையினரும் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

இந்த கொடி அணிவகுப்பு கொடைக்கானலில் உள்ள கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் துவங்கி 7 ரோடு சந்திப்பு, கொடைக்கானல் ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அண்ணாசாலை வழியாக அரசு மேல்நிலை பள்ளி அருகே ஊர்வலம் நிறைவு பெற்றது. இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இனிகோ திவ்யன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்பின் அப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

Categories

Tech |