Categories
அரசியல்

“நாங்க இருக்கோம்” நீங்க கவலையேப்படாதீங்க…. ஆறுதல் சொன்ன ஓபிஎஸ்…!!!

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்தத் தீர்மானம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. தீர்மானம் அனுப்பப்பட்டு 142 நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் முதல்வர் மு.க ஸ்டாலின் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநருக்கு அறிவுறுத்தி வந்தார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படாமல் மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மீண்டும் இன்று காலை 11 மணி அளவில் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இதில் பாஜக மற்றும் அதிமுக பங்கேற்கவில்லை.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பங்கேற்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரான ஓ.பன்னீர்செல்வம், மு.க ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,” நீட் தேர்வு குறித்த அதிமுகவின் கருத்து ஏற்கனவே முதலில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. எனவே நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு அதிமுக தனது முழு ஆதரவை அளிக்கும். ” இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது . முன்னதாக ஓ. பன்னீர்செல்வம் திமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவே மு. க ஸ்டாலின் சமூகநீதி கூட்டமைப்பு என்ற ஒன்றை தொடங்கியுள்ளார் எனவும், எனவே இதுபோன்ற கூட்டமைப்புகளில் அதிமுக பங்கேற்க விரும்பவில்லை எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |