நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக் குறையை சுட்டிக் காட்டி, சாமானியர் ஆக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும் பொய் சொன்னால் கன்னத்தில் அறை விழும் என்று நடிகர் சித்தார்த் கூறியிருந்தார். இதனையடுத்து எனது போன் நம்பரை தமிழக பாஜக ஐடி பிரிவு லீக் செய்ததால், ஆபாச பேச்சு, கொலை மிரட்டல் அழைப்பு வருவதாக குற்றம் சாட்டிய சித்தார்த், நான் பேசுவதை யாராலும் நிறுத்த முடியாது என்று சூளுரைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த்திற்கு நடிகை பார்வதியை தொடர்ந்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் ஆதரவு தெரிவித்துள்ளார். பாசிஸ்டுகளுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் சித்தார்த் ஒரு குறிப்பிட தகுந்த குரல், தன்னுடைய திரை வாழ்க்கைக்கு ஆபத்து வரக்கூடும் என்று தெரிந்தே போராடிக் கொண்டிருக்கும் அவர் நம்ம ஆதரவுக்குரியவர். நாங்க இருக்கோம் மாம்ஸ்…. பயங்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.