போலீஸ் வேடத்தில் மர்ம நபர்கள் மூதாட்டியிடம் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் 73 வயதான மூதாட்டியிடம் போலீஸ் அதிகாரிகளாக நடித்து ஒரு லட்சம் மதிப்புள்ள பணம் ,நகைகள் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெளியிட்ட தகவலின்படி போலியாக வேடமணிந்த பெண் போலீஸ் ஒருவர் மூதாட்டிக்கு உதவி செய்வதாக தொலைபேசியில் ஏமாற்றி உள்ளார்.
மேலும் இதனை பற்றி யாரிடமும் கூற வேண்டாம் என்றும் பணத்தையும் விலைமதிப்பற்ற பொருட்களையும் தங்களிடம் ஒப்படைக்கும்படியும் மூதாட்டியிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட மூதாட்டி பயத்தால் தன் வங்கியில் இருந்து பணத்தையும் , மதிப்புமிக்க பொருட்களையும் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக வீட்டில் வைத்துள்ளார். இதனையறிந்து மூதாட்டியின் இடத்திற்கு போலீஸ்காரராக வேடமணிந்த ஒருவர் அவரிடம் பேசி உள்ளார்.
அப்போது மூதாட்டி கவனக் குறைவாக இருந்ததால் அந்த நபர் வீட்டில் இருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களையும் எடுத்துக்கொண்டு தப்பித்துவிட்டார் .பின்பு அந்த மூதாட்டி மோசடிக்கு ஆளானதால் Zug போலீஸில் புகார் செய்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் Zug காவல்துறை இதுபோன்ற மோசடிகளிலிருந்து மக்களை ஜாக்கிரதையாக இருக்க எச்சரித்துள்ளனர் .