Categories
அரசியல்

நாங்க என்ன ”பாஜகவா” அப்படி செய்ய…! அசால்ட்டாக மாஸ் காட்டிய திமுக எம்.பி …!!

திமுக தேர்தல் அறிக்கை குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, ஆட்சியில் பத்து வருடமாக இருப்பவர்கள் நாள்தோறும் பெட்ரோல் விலை, டீசல் விலை, சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது என்று மக்கள் கூக்குரலிடும் பொழுதெல்லாம் அமைதியாக இருந்தவர்கள், தேர்தல் வருகிற நேரத்தில் ஒரு வாக்குறுதியை கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய ஏமாற்று பேர்வழிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்.

நாங்கள் எதிர் கட்சி தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் என்று நாங்கள் சொல்கிறோம். ஆட்சிக்கு வந்தால் இத்தனை நன்மைகளை செய்கிறோம் என்று சொல்கிறோம். ஆளுங்கட்சியாக பத்து ஆண்டு காலம் இருந்தவர்கள் இந்த நன்மைகளை எல்லாம் செய்து இருக்க வேண்டுமே தவிர தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக கொடுப்பது என்பதே ஏமாற்று வேலை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் பல நாளாக ஓடாமல் இருந்து திருவாரூர்  தேர் ஓடியது. ஆட்சியிலே இருக்கிற திமுக…. முதலமைச்சராக கலைஞர் இருந்த போது… முதலமைச்சராக இருப்பவர் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு படி நடப்பவர். அரசியல் அமைப்பு சட்டம் அனைத்து மத மக்களையும் ஒன்றாக பார்க்கிறது.எனவே அனைத்து மத மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று அரசியல் அமைப்பு சட்டப்படி இயங்க வேண்டிய பொறுப்பிலே இருக்கிற முதலமைச்சர் சொல்வார்.

திமுக தலைவர் என்பவர் கொள்கைகளை விளக்கி சொல்ல வேண்டியவர். எனவே முதலமைச்சராக இருக்கும்பொழுது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு மதிப்பு கொடுத்து பேச வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதே சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டு சிறுபான்மையின மக்களை எல்லாம் அவமானப்படுத்துவதற்கு நாங்கள் பாஜக அல்ல, இது திமுக, மக்களுக்கான இயக்கம் என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |