விலங்குகளின் வீடியோகளுக்கு என்று இணையத்தளத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போதும் ஒரு சுவாரசியமான வீடியோவானது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சில விலங்குகள் ஒன்றாக காணப்படுகிறது. இதனைப் பார்த்து அனைவரும் மிகவும் ஆச்சரியப்படுகின்றனர். நாய்கள் மற்றும் பூனைகள் ஒன்றுக்கொன்று எதிரிகளாக இருக்கிறது. அவை நேர் எதிரே வந்தாலே மோதல் தான் ஏற்படும். வீடியோவில் ஒரு மான் அமைதியாக தன் விலங்கு நண்பர்கள் உடன் பொழுதை கழிப்பதை பார்க்கிறோம்.
அத்துடன் ஒரு மான் தரையில் வசதியாக அமர்ந்து இருப்பதை காண முடிகிறது. அதனைச் சுற்றி ஒரு நாய் மற்றும் பூனையையும் காண முடிகிறது. இவை உல்லாசமாக, அமைதியாக தங்களுக்குரிய தனிப்பட்ட நேரத்தை ஒன்றோடு ஒன்று செலவழிப்பது போன்று தோன்றுகிறது. இடையிடையே விலங்குகள் பாச மிகுதியால் கொஞ்சிக் கொள்வதையும் வீடியோவில் காண முடிகிறது. இது பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக இருக்கிறது.
इसे कहते हैं भाईचारा…#TrendingNow #Trending #trendingvideos #ViralVideo pic.twitter.com/jFwfRtUMRg
— Narendra Singh (@NarendraNeer007) November 19, 2022
வீடியோவில் பல இனங்களைச் சேர்ந்த விலங்குகளுக்கு இடையில் காணப்படும் பரஸ்பர அன்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் வீடியோவில் பூனைக்குட்டி மானுடன் விளையாடுவதையும், அதனை அரவணைப்பதையும் காண முடிகிறது. இதற்கிடையில் பூனை தன் குழந்தைகளை மானுடன் விளையாட சுதந்திரம் கொடுக்கிறது. சமூகத்தில் அன்புடனும், சகோதரத்துவத்துடனும் வாழ கற்றுக் கொடுக்கும் அடிப்படையில் இந்த வீடியோ இருக்கிறது.