Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நாங்க ஓட்டு போட வேண்டாமா…? ஊழியர்கள் விடுத்த கோரிக்கை…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சில நபர்களுக்கு தபால் வாக்கிற்கான சீட்டுகள் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பணியாற்ற பலவிதமான துறைகளில் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்களை தேர்தல் குழு ஈடுபடுத்தியது. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கிளவுஸ் வழங்குவதற்கும், சானிடைசர் அளிப்பதற்கும் துப்புரவு பணியாளர்களையும், அங்கன்வாடி பணியாளர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தியது.

இந்த நிலையில் தேர்தல் நடத்துகின்ற அலுவலர்கள் தேர்தல் பணியாற்றிய அனைவருக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்காக வாக்குச் சீட்டை அனுப்பி வைத்தனர். இருப்பினும் கூடுதல் பணிக்காக அமர்த்தப்பட்ட துப்புரவு பணியாளர்கள் போன்றவர்களுக்கு இன்றளவும் தபால் வாக்குக்கான சீட்டு கிடைக்கப்பெறவில்லை. இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |