Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாங்க கடன் தருகிறோம்…. முகநூலை நம்பி ஏமார்ந்த வாலிபர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

முகநூல் மூலம் கடன் வாங்கி தருவதாக கூறி 76 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அருகே உள்ள காயிதேமில்லத் தெருவில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சாகுல் ஹமீது தனது செல்போனில் முகநூல் பக்கத்தை பார்த்துகொண்டிருந்த போது ஒரு நிறுவனத்தின் பெயரில் கடன் தருவதாக இருந்துள்ளது. இதனை பார்த்த சாகுல் ஹமீது அதில் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொடு பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர் நாங்கள் 2 லட்சம் வரை கடன் தருகிறோம் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய சாகுல் ஹமீதும் அவர்கள் கேட்ட ஜி.எஸ்.டி. வரி, கல்வி சான்று, செயல்முறை கட்டணம், நடைமுறை கட்டணம் என பல்வேறு வகையாக கட்டணங்களை வசூலித்துள்ளனர். அதன்படி சாகுல் ஹமீது இதுவரையில் 76 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் மூலம் அந்த மர்மநபர்களுக்கு செலுத்தியுள்ளார். இதனையடுத்து இந்த பணத்தை வாங்கி கொண்டு கடன் கொடுக்காமல் மேலும் 50 ஆயிரம் ரூபாயை கேட்டனர்.

இதில் சந்தேகமடைந்த சாகுல் ஹமீது அந்த நிறுவனம் குறித்து விசாரித்ததில் அது போலி நிறுவனம் என தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ராமநாதபுரம் சைபர்கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து சாகுல் ஹமீதை ஏமாற்றிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |