Categories
கிரிக்கெட் விளையாட்டு

நாங்க குழுவாக சிறப்பாக ஆடவில்லை…..  நாங்க மிகவும் மோசமாக விளையாடி வருகிறோம்…. ரோகித் சர்மா வேதனை….!!!!

ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து 5 தோல்வியை சந்தித்தது இது இரண்டாவது முறையாகும்.

ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து இந்த ஐபிஎல்லில் ஐந்து முறை தோல்வியை தழுவியது. புனேவில் நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 5 முறை தோல்வியை சந்தித்தது இது 2வது முறையாகும்.

இதற்கு முன்பாக 2014ஆம் ஆண்டு முதல் 5 போட்டியில் தோல்வி பெற்றிருந்தது. தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்ததாவது: “நாங்கள் நன்றாக ஆடினோம் என்றுதான் நினைத்தோம்.மிகவும் நெருங்கி வந்தோம். சில ரன்அவுட்டுகள் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. நாங்கள் ரன் ரேட்டை தக்கவைத்தோம். ஆனால் கடைசியில் அது முடியாமல் போனது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சு மிக சிறப்பாக இருந்தது. பேட்டிங் வரிசையை மாற்றி அமைத்தும், எங்களால் வெற்றி பெற முடியவில்லை.

இந்த ஆடுகளத்தில் 190 ரன்கள் எடுக்கக்கூடிய இலக்குதான். நாங்கள் குழுவாக சிறப்பாக ஆடவில்லை. இந்த தொடரில் நாங்கள் மிகவும் மோசமாக விளையாடி வருகிறோம். பஞ்சாப் அணி 3 வெற்றியை பெற்றது, இதன் மூலம் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |