Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாங்க கேக்குறத குடுங்க… இல்லனா இதை கண்டிப்பா புறக்கணிப்போம்… மயிலாடுதுறையில் கிராம மக்கள் உண்ணாவிரதம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி கிராமத்தில் மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் இரட்டைமடி மற்றும் சுருக்குமடி ஆகிய வலைகளை மீன் பிடிக்கு பயன்படுத்துவதற்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடையை நீக்கி சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி சந்திரபாடி மீனவ கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், இறால் பண்ணைகளை மூட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த போராட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த போராட்டத்தில் கருப்பு கொடி அந்த கிராமம் முழுவதும் ஏற்றப்பட்டிருந்தது.

இதுகுறித்து சந்திரபாடி கிராம மீனவ பஞ்சாயத்தார்கள் பேசும்போது, 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை அரசு வாபஸ் பெற வேண்டும். தமிழக அரசு மீனவர்களுக்கு சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும். இறால் பண்ணைகளை மூட வேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம். சுருக்கு மடி வலை பிரச்சனையில் ஏற்கனவே 9 கிராமங்கள் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் 10-வதாக சந்திரபாடி கிராமமும் தேர்தலை புறக்கணித்துள்ளது என்றனர்.

Categories

Tech |