Categories
மாநில செய்திகள்

நாங்க சொல்லியும் கேட்கலானா…. விநாயகர் பாத்துக்குவாரு…. இந்து முன்னணியினர் வேண்டுதல்…!!!

தமிழகத்தின் விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் பொதுமக்கள் கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. எனவே தடையை நீக்க கோரி கோவையில் இந்து முன்னணியினர் கோவில்களில் முறையிட்டு வேண்டுதல் செலுத்தினர்.

மேலும் தமிழக அரசு இன்னும் இதற்கு செவி சாய்க்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இன்று தமிழக முழுவதும் இந்து முன்னணியினர் கோவில்களில் இறைவனிடம் முறையிட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உப்பிலிபாளையம் பகுதியில் தண்டு மாரியம்மன் கோவிலில் இறைவனிடம் முறையீடு செய்கின்றனர்.

Categories

Tech |