சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி கொள்ள 1,000 கணக்கான அமெரிக்க வீரர்கள் மறுத்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்க நாட்டின் ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து வீரர்களும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசியை செலுத்தி கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாநிலத்தில் பணிபுரியும் 1,000 கணக்கான தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் தாங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்கள் . இந்த தகவலை அமெரிக்க நாட்டின் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.