தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் வென்று நிச்சயம் ஆட்சிக்கு வருவோம் என டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் ஸ்லீப்பர் செல்கள். ஆர் கே நகர் தொகுதியில் வெற்றி பெற்றது போல் பேரவைத் தேர்தலிலும் வென்று நிச்சயம் ஆட்சிக்கு வருவோம் என்று டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார். இதன் மூலம் சசிகலா ஆதரவுடன் டிடிவி தினகரன் தனித்துப் போட்டியிட இருப்பது உறுதியாகியுள்ளது. சசிகலா ஆதரவாக இருக்கும் சமூகம் டிடிவியை வெற்றி பெற வைக்க கடுமையாக உழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.