செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இடம் ஸ்மார்ட் திட்டத்தில் ஆயிரம் கோடி வேஸ்ட் என்று அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய அவர், திமுக அரசு மிகவும் அவசரப்படுகிறது. கடந்த பத்து வருட கால ஆட்சியில் அம்மாவின் அரசு சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து செயல்படுத்தி வந்தது. தமிழகத்தை அமைதி பூங்காவாக, தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி தந்துள்ளது என பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அதிமுக அரசு வழங்கியிருக்கிறது.
மக்களுக்கு எந்த குறையும் இல்லாமல் பல முன்னோடியான திட்டங்களை தந்துள்ளோம். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் தான் பொறுப்பு இருக்கிறது. இந்த இரண்டு அரசுகளும் விலையை குறைக்க வேண்டும். டீசல் விலை உயர்வினால் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பேசியுள்ளார்.