Categories
அரசியல்

நாங்க நிறைவேத்தினோமோ இல்லீயோ…. அது பிரச்சினை இல்லை…. இப்போ நீங்க செய்யுங்க…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 10 வருடங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஒரு சில வாக்குறுதிகள் தற்போது கொரோனா நிலைமை காரணமாக தாமதமாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எதிர்க்கட்சியினர் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினோமோ? இல்லையோ? அது பிரச்சினை இல்லை. உங்கள் வாக்குறுதிகளை நம்பி மக்கள் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். எனவே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். அது தான் எங்கள் கோரிக்கை என்று தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |