Categories
உலக செய்திகள்

நாங்க யாரு பக்கமுமில்லை…. நடுநிலை நிலைப்பாட்டை வகித்த இந்தியா….வரவேற்கும் ரஷ்யா…!!

இந்தியா வாக்களிக்காமல் நடுநிலையாக இருந்த நிலைப்பாட்டை நாங்கள்  வரவேற்கிறோம் என இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தில் நடுநிலையாக இருந்த இந்தியாவின்  நிலைப்பாட்டுக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய  நாடுகள் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானத்தை கொண்டு கொண்டுவந்தன.

நேற்று  அதிகாலை 15 நாடுகள் கொண்ட ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில் 11 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் சீனா, இந்தியா, ஐக்கிய அரபு, அமீரகம் ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் நடுநிலைவாதிகள் பற்றி இந்திய பிரதிநிதி திரு மூர்த்தி பேசியபோது மனித உயிர்களை பறிப்பது எந்த தீர்வையும் கொடுக்காது.

மீண்டும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்புமாறு  அனைத்து தரப்பையும் வலியுறுத்துகிறோம். பல்வேறு காரணங்களுக்காக இந்தியா  தீர்மானத்தில் வாக்களிப்பதை தவிர்த்து இருக்கிறது என்றார். இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக 15 நாடுகள் தீர்மானத்தில் வாக்களித்த போதும் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரமுள்ள தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த சூழலில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யா வரவேற்பதாக  தெரிவித்துள்ளது.வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் நடுநிலையாக  இருந்த நிலைப்பாட்டை வரவேற்கிறோம் என இந்தியாவில் உள்ள ரஷிய  தூதரகம் கூறியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுடனான சுமூக உறவு தொடரும் என ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் இரு நாட்டு அதிகாரிகளும் வன்முறையை வைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை பிரதமர் மோடியுடன் தொலைபேசி மூலம் உரையாடல் மேற்கொண்ட உக்ரைன் அதிபர் மீண்டும் முன்வைக்கப்படும் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தில் உக்ரைனுக்கு அரசியல் தெளிவாக ஆதரவளிக்க  கோரி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |