ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு நாங்கள் தயார் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான 13ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டி20 கிரிக்கெட் போட்டி காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் குறிப்பிட்ட காலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்தி முடிக்க வேண்டுமென்று ஐ.சி.சி திட்டமிட்டுள்ளது. ஐ.சி.சி யின் முன்னாள் தலைவர் ஒருவர் இந்தியாவில் சூழ்நிலை தற்போது சரியில்லாத காரணத்தால் தொடரை வெளிநாடுகளில் நடத்துவது தொடர்பாக திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் என இரண்டு நாடுகளும் ஐபிஎல் தொடரை எங்களுடைய நாட்டிலே நடத்திக் கொள்ளலாம் என்று விருப்பத்தை அறிவித்துள்ளனர்.
துபாய் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் சிட்டி மற்றும் நிகழ்ச்சிகளின் தலைவரான சல்மான் ஹனிஃப், துபாய் சர்வதேச கிரிகெட் மைதானமும் மற்றும் ஐபிஎல் அகாடமியும் டி20 தொடரை நடத்த எப்போதும் தயார் நிலையில் உள்ளோம். இங்கு 9 ஆடுகளங்கள் உள்ளதால் குறிப்பிட்ட காலத்திற்குள் போட்டிகளை நடத்தி விடலாம். இதுவரை எந்த கிரிக்கெட் போட்டியும் திட்டமிட்டு நடத்தப்படாததால் அனைத்தும் புதியதாகவே உள்ளது. எனவே ஐபிஎல் தொடரை எங்கள் நாட்டில் நடத்துவதற்கு நாங்கள் எப்பொழுதும் தயார் நிலையிலேயே இருக்கிறோம் என்று அறிவித்தார். இது போன்றே 2014 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.