தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து 4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் மு.க ஸ்டாலின் வீடியோ ஒன்றில் பேசியிருந்தார். மேலும் அதில் முதன்மையான வாக்குறுதிகளை பட்டியலிட்டும் காட்டியிருந்தார். இதனை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். திமுக கொடுத்த வாக்குறுதிகளில் நான்கைந்து மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரும்பாலான வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர் பாபு, தமிழக அரசு சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டுகிறார். ஆட்சி பொறுப்பேற்ற பின் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து புள்ளிவிவரங்களுடன் விவாதிக்க நாங்கள் தயார். அதிமுக தயாரா? என்று சவால் விட்டுள்ளார்.