Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நாங்க ரொம்ப கஷ்டபடுறோம்…. மறுபரிசீலனை பண்ணுங்க…. அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

சலூன் கடை தொழிலாளிகள் நேர கட்டுப்பாடுடன் கடைகளை திறக்க அனுமதி வேண்டி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி மாவட்டத்தில் மாநில இளைஞரணி தலைவரின் தலைமையில் வீரத் தியாகி தொழிலாளர்களின் கட்சி சார்பாக முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றுள்ளனர். அதில் அவர்கள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருவதால் அரசு சலூன் கடைகள் செயல்பட தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் சலூன் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். ஆகையால் சலூன் கடைகளை நேர கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி அளிக்க வேண்டியும், அரசின் அறிவிப்பினை மறுபரிசீலனை செய்து சாதகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Categories

Tech |