மதுரையில் செவிலியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் பரவி கொண்டிருக்கும் தொற்றினை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் ஆங்காங்கே தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளையும் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறது. இத்தொற்றின் பரவலை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மருத்துவத் துறையின் பங்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதிலும் குறிப்பாக செவிலியர்கள் ஆற்றும் பணி பாராட்டத்தக்கது. இவ்வாறு இருக்கும் நிலையில் மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் சுகாதார துறை செவிலியர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அனைவரும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தங்களது சம்பளப் பணத்தை விரைவில் வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.