தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 808 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் 11 ஆயிரத்து 797 சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கின்றன.
இதில் 218 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி இருக்கின்றார்கள். இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் பல இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தமிழக தேர்தல் முடிவில் திமுக கூட்டணி முன்னிலை வகுத்துவரும் நிலையில் பாஜக தேர்தலை தனித்து சந்தித்தது. எனவே இந்த வெற்றி பாஜகவினரை உற்சாகமடைய செய்துள்ளது.
பொதுவாக பாஜகவுக்கு எதிரான தேர்தல் பிரசாரத்தில் பாஜக உள்ளே வந்துடும்…. பாஜக உள்ளே வந்துடும் என கூறி பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் #நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது.
BJP's efforts are showing results🔥🔥🔥 #நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு #பாஜக@annamalai_k @BJP4TamilNadu @CTR_Nirmalkumar @SanghiPrince https://t.co/ASHVQrEr8h
— Ram Kumar (@imramsrk) February 22, 2022
Super Hash tag #நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு https://t.co/Qz2Yav8nAR
— Sri Rama Jayam Vande Mataram 🙏🇳🇪 (@sdrvr) February 22, 2022