விண்வெளி பாதுகாப்பு மேம்படுத்துவதற்காக நாசாவுடன் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எலான் மஸ்க்கின் தனியார் விண்வெளி நிறுவனம்.
எலான் மஸ்க்கின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி பாதுகாப்பு மேம்படுத்துவதற்காக நாசாவுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.நாசா நிர்வாகி ஸ்டீவ் ஜூர்சிக் இதனை குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘வானிலை நிலவரங்கள் ,லொகேஷன், தகவல் தொடர்புகள் போன்ற பல செயற்கைக்கோளை நம்பி தான் மக்கள் உள்ளனர்’ .
விண்வெளியில் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்த வேண்டும்.அதற்கு தகவல் தொடர்புகளை அதிகரிப்பது , தகவலை பரிமாறி கொள்வது போன்று சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவது முக்கியம் என்று அவர் தெரிவித்தார். ஆராய்ச்சி மேற்கொள்ளும் இரு நிறுவனங்களுக்கும், மற்ற செயறக்கோள்களின் இருப்பிடம் தெளிவாகத் தெரியும் என்பதால் , தேவையற்ற விபத்துகளை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.