Categories
உலக செய்திகள்

“நாஜிக்கலால் கொல்லப்பட்ட 50 லட்சம் ஐரோப்பிய யூதர்கள்” பாலஸ்தீன அதிபர் கூறிய வார்த்தை…. திடீரென வெடித்த சர்ச்சை…!!!

பாலஸ்தீன நாட்டின் அதிபரின் வார்த்தையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீன நாட்டின் அதிபர் முகமது அப்பாஸ் கடந்த செவ்வாய் கிழமை ஜெர்மனிக்கு சென்று இருந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அதிபரிடம், கடந்த 1972-ம் ஆண்டு பாலஸ்தீன தீவிரவாதிகளால் இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கேட்பீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அதிபர் முகமது அப்பாஸ் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். அதன் பிறகு கடந்த 1947-ம் ஆண்டு முதல் 50 ஹோலகாஸ்ட்களை இஸ்ரேல் தான் நடத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்தக் ஹோலகாஸ்ட் என்ற வார்த்தை 2-ம் உலக போரின் போது நாஜிக்கலால் யூதர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை குறிக்கிறது. மேலும் நாஜிக்களால் 50 லட்சம் ஐரோப்பிய யூதர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை வேறு எந்த சம்பவத்துடனும் ஒப்பிட்டு பேசக்கூடாது என்று ஜெர்மனி கூறி வரும் நிலையில், அதிபர் முகமது அப்பாஸ் ஹோலகாஸ்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |