நாஞ்சில் விஜயன் தன்னை உருட்டுக்கட்டையால் தாக்கினார் என சூர்யா தேவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
அது இது எது நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் சமீபத்தில் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்த நிலையில் இவருடன் சேர்ந்து சூரியா தேவி என்ற பெண்ணும் வனிதாவை அவதூறாகப் பேசி வந்துள்ளனர். பின்பு வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் சூரியா தேவியை கைது செய்துள்ளனர். அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் திரும்பவும் வேறு பிரச்சனை தொடங்கியுள்ளது.
நாஞ்சில் விஜயன் தான் வசித்து வரும் வீட்டிற்கு ரவுடிகளை அனுப்பி தன்னை தாக்க வந்ததாக சூர்யா தேவி மீது சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டரர் மற்றும் ரவுடிகள் தாக்கிய புகைப் படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதன் அடிப்படையில் சூர்யா தேவியின் மீது வளசரவாக்கம் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த விஷயத்தில் அதிரடி திருப்பமாக நாஞ்சில் விஜயன் மீது சூர்யா தேவி புகார் கொடுத்துள்ளார்.
நானும் நாஞ்சில் விஜயனும் கடந்த ஆறு வருடங்களாக நண்பர்களாக இருந்து வந்தோம். இந்நிலையில் நடிகை வனிதாவிற்கு எதிராக யூடுபில் கருத்து தெரிவித்த போது தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வந்த நாஞ்சில் விஜயன் திடீர் என சில நாட்களுக்கு முன்பு வனிதாவுடன் சமரசம் ஆகி விட்டார். ஆகவே ஆத்திரமடைந்த நான் இதனைப்பற்றி கேட்பதற்காக கடந்த 11ஆம் தேதி இரவு நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு சென்றதாகவும் அப்போது அவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி மற்றும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் எனது மண்டை உடைந்தது என இவ்வாறு கூறினார்.
இதைத் தடுக்க வந்த எனது நண்பர் அப்புவையும் கத்தியால் வெட்டினார். இதில் இருவரும் படுகாயமடைந்து .தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்து கொண்டு வீடு திரும்பினோம். இதற்கிடையில் நான் 3 பேருடன் வந்து நாஞ்சில் விஜயன் மற்றும் துணை நடிகை ஷீபாவை தாக்கிவிட்டு தப்பி சென்றதாக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சென்று நாஞ்சில் விஜயன் நாடகம் ஆடியுள்ளார்.
எனவே என்னையும் எனது நண்பரையும் தாக்கிய நாஞ்சில் விஜயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் நாஞ்சில் விஜயன் இதுவரை போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை மற்றும் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என போலீஸார் கூறுகின்றனர்.