மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் ரஞ்சித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான சந்தோஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நாடகத்தைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வலையங்குளத்துபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரஞ்சித் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.