Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு …. திடீர் அறிவிப்பு….!!!!

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனையடுத்து இடைத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களைப் பிரதமர் மோடி மக்களவையில் அறிமுகம் செய்து வைக்க முயன்றபோது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மக்களவை மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்பட்டது.

இதன்பிறகு மாநிலங்களவையில் பிரதமர் மோடி  புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்க முயன்றார். அப்போதும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாநிலங்களவையும் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் 2 மணிக்கு கூடியது. இருப்பினும் இரு அவைகளிழும் அமளி தொடர்ந்தது. இதனால் மாநிலங்களவை மூன்று  மணி வரையும், மக்களவை 3.30 வரையும் ஒத்திவைக்கப்பட்டன. இதன்பிறகு மீண்டும் அவைகள் கூடியபோதும் அமளி நீடித்தது. இதனையடுத்து இரு அவைகளும் நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |