Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கம்…. ராகுல் காந்தி குற்றச்சாட்டு…!!!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில் 14 எதிர்க்கட்சி எம்எல்ஏ மற்றும் எம்பி களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்திய பிறகு கொட்டும் மழையில் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது.

பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால் நாடாளுமன்றத்தில் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மத்திய அரசு பெகாசஸ் செயலி மூலம் ஒட்டு கேட்டதா? இல்லையா? என்பதை குறித்து விளக்க வேண்டும். அரசே நாட்டு மக்களை உளவு பார்த்ததா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |