சக ஊழியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய பெண்ணிடம் பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரிட்டனி ஹிக்னிஸ் என்ற பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது சக ஊழியர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெனோல்ட்ஸ் அலுவலகத்தில் ஸ்காட் மோரிசன் என்ற ஆளும் லிபரல் கட்சியில் பணியாற்றிய ஒருவரால் ஹிக்னிஸ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் இப்பெண்ணிடம் பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஹிக்னிஸ் முதலில் புகார் அளிக்க விரும்பவில்லை. பின்பு 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போலீசில் தனிப்பட்ட முறையில் புகார் கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் அப்பெண் கூறுகையில் இந்த தவறான செயல் குறித்து ரெனோல்ட்ஸ் அலுவலகத்திலுள்ள மூத்த ஊழியர்களிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார் .
அதனை ரெனால்ட்ஸ் அலுவலகம் கடந்த ஆண்டு இச்சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டதாக கடந்த திங்களன்று உறுதிப்படுத்தினர். இந்நிலையில் ஹிக்னிஸிடம் பிரதமர் ஸ்காட் மாரிசன் மன்னிப்பு கேட்டுள்ளார் .மேலும் இது குறித்து கான்பெர்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர்’ இந்த மாதிரி எந்தப் பெண்ணுக்கும் நடந்திருக்கக் கூடாது, அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இனிமேல் எந்தப் பெண்ணுக்கும் இந்த மாதிரியான தவறு நடக்காமல் பாதுகாப்பாக இருப்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன்’ என்றும் கூறியுள்ளார்.