நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பேசிய வார்த்தைகள் நாடாளுமன்றத்தையே அதிரவைத்தது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று நடந்தது. அதில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, தனது ஆவேசமான உரையாடல் அவையும், ஆளும் கட்சியையும் அதிர வைத்தார். குடியரசு என்றால் என்ன என்று தொடங்கி ஒடுக்குமுறை என்பது கோழைத்தனம். அரசு எப்படி கோழைத்தனமாக செயல்படுகிறது. சிஏஏ போராட்டம், விவசாயிகள் போராட்டம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி, நீதித் துறையின் வீழ்ச்சி என பல விஷயங்களைப் பற்றி மிக ஆவேசமாக ஆழமான விவாதங்களை முன் வைத்து பலரையும் கவர்ந்தார்.
மேலும் குடியரசு கோழைகளால் உருவாக்கப்பட்டதல்ல, கோழைகள் இதை பாதுகாக்க முடியாது. அதிகார மமதை, வெறுப்பு, மதவெறி மற்றும் பொய் ஆகியவற்றால் மறைந்திருக்கும் கோழைகள் இந்த விஷயங்களை வீரம் என்று கருதுகிறார்கள். இந்த அரசும் தனது பிரச்சாரத்தில் பொய்களை பரப்புவதன் மூலம் கோழைத்தனத்தை வீரம் என்று காட்டுவதை தங்கள் மிகப்பெரிய வெற்றியாக கருதி வருகிறது என்று கூறி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.