Categories
உலக செய்திகள்

நாடாளுமன்றம்: இப்படியெல்லாம் பண்ண முடியாது?…. நாமல் ராஜபக்ஷ பேச்சு…..!!!!!

ஜனநாயகத்தினை மீறி அரசாகங்களை மாற்ற இயலாது என்று நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ தெரிவித்து உள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து இருப்பதை அடுத்து நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து மக்கள் நாடு முழுதும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோட்டாபய பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாட்டின் புதிய நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி, இன்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் அவசர நிலை தொடர்பாக விவாதிக்க இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடிய சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச, அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

அதன்பின் பேசிய நாமல் ராஜபக்ஷ, முதலில் நாம் மக்களின் கோபத்தை தணிக்க பணிபுரிய வேண்டும். ஏனெனில் ஜனநாயகம் கொள்கைகளை மீறி அரசாகங்களை மாற்ற இயலாது. இதனிடையில் இன்று (GO HOME GOTA) கோட்டாபய பதவி விலக வேண்டும் என கூறுவீர்கள், ஆனால் நாளை அவர் பதவி விலகினால் பின் என்ன திட்டம் இருக்கிறது..? யார் நாட்டை வழிநடத்துவார்கள் என நாமல் கேள்வி எழுப்பினார். அதனை தொடரந்து தீர்மானம் எதுவும் இன்றி இலங்கை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஆகவே நாளை மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |