நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அதிக அளவு அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுப் பணியில் இருப்பவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் வெளியான முடிவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. கொரோனா குறித்த எந்த ஒரு அறிகுறியும் எனக்கு இல்லாததால், மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்”என்று அவர் கூறியுள்ளார்.