தலை நகர் டெல்லியில் நாட்டின் அதிகார மைய கட்டிடங்களை புதிதாக அமைக்கும் சென்ட்ரல் விசா திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இதன்படி புதிய நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம் புதிய துணை ஜனாதிபதி மாளிகை பொது தலைமைச் செயலகம் போன்றவை கட்டப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ராஜபாதை மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு அது திறக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள கட்டிடங்களின் பணிகளும் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ஜனாதிபதி மாளிகையில் சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
அந்த வகையில் துணை ஜனாதிபதி மாளிகையில் இருந்து நாடாளுமன்ற கட்டிடத்திற்கு செல்லும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகின்றது. அதாவது பிரதமர் மோடி இல்லத்திற்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் இடையே எதிர்காலத்தில் அமைய இருக்கின்ற சுரங்கப்பாதை வழியாக மேற்படி சுரங்கப்பாதை செல்லும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளது. இதன் மூலமாக முக்கிய பிரமுகர்களின் பயணங்களால் அடிக்கடி போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் துணை ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை 21 கோடி ரூபாயில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த சுரங்கப்பாதை காண பணிகள் தொடங்கிய நான்கு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இதற்கான டென்டரை மத்திய பொதுப்பணித்துறை நேற்று வெளியிட்டுள்ளது. அந்த டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வருகின்ற 15-ம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் இந்த சுரங்கப்பாதை 185 மீட்டர் நீளமும் 6.20 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும் என டெல்லி வட்டாரங்கள் கூறியுள்ளது.