Categories
அரசியல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு ரெடியாகும் திமுக… கட்சியினருக்கு முதல்வர் இட்ட கட்டளை…!!!!!!

விருதுநகர் அருகே பட்டம்புதூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கியுள்ளார். விழாவில் வருவாய் துறை அமைச்சர் கே கேஎஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றியுள்ளார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட கழக பொருளாளர் டி ஆர் பாலு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். விழாவில் நன்றியுரை ஆற்றிய dr பாலு கலைஞர் விருதை பெற்றுக் கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். மேலும் வருங்காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவைக்கிணங்க பணியாற்றுவேன் என பேசி உள்ளார். அதனை தொடர்ந்து பேசிய துறைமுருகன் திமுக ஆட்சி அமைத்து ஓராண்டு காலம் யாரும் குறை சொல்ல முடியவில்லை.

கட்சியையும் ஆட்சியையும் ஒருங்கே நடத்துவது என்றால் சாதாரண விஷயம் அல்ல. அந்த திறமையை முதல்வர் ஸ்டாலின் பெற்றிருக்கின்றார். மேலும் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் திறமை கலைஞர் பெற்றிருந்தார். இன்னும் 60 வருட காலத்திற்கு ஆட்சிக்கும் கட்சிக்கும் பயமில்லை என பேசி உள்ளார். இந்த நிலையில் திமுக முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் இந்தி திணிப்பை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். 40/40வெற்றியை நாம் வரும் பாராளுமன்ற தேர்தலில் பெற வேண்டும் அதற்கு விருதுநகர் முப்பெரும் விழா தொடக்கமாக அமையட்டும் என பேசி உள்ளார். கலைஞர் ஒரு சில கடிதம் எழுதி ஆட்சியைப் பிடிப்பார் ஒரு சில கடிதம் எழுதி சர்வாதிகார ஆட்சியை ஒழிப்பார் காமராஜர் ஆட்சி கலைஞர் ஆட்சி, அம்மா ஆட்சி ஸ்டாலின் ஆட்சி என எந்த ஆட்சியும் திராவிட ஆட்சி தான் என கூற வேண்டும் இளைய சமுதாயத்தின் மனதில் விதைக்க வேண்டிய இந்த திராவிட மாடல் புத்தகம் நான் கட்சிக்காரர் நல்ல கொள்கைக்காரன். மேலும் பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது இனி தமிழகத்தை நிரந்தரமாக திமுக தான் ஆளும் என பேசி உள்ளார்.

Categories

Tech |