நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலுக்காக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுளர்னர. அதில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோர் ஆவர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்துநடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கு, அதிமுக சார்பில் போட்டிடுபவர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதிமுக சார்பில், கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ஆகியோர் நிறுத்தப்படுவார்கள் என்றும், மேலும் ஒரு இடத்திற்கு, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்றும் அதில் அக்கட்சியின் தலைவரே போட்டியிடுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.