தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் விரைவில் காலியாகிறது. புதிய மாநிலங்களை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகின்ற 24ஆம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்களின் பலத்தின் அடிப்படையில் திமுகவிற்கு 4 இடங்களும், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திமுக 3 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சி காங்கிரசுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்படுகின்றது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடசென்னையில் ஆளு மிக்கவராக வலம் வரும் அமைச்சர் சேகர்பாபுக்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில், அவரது பகுதியை சேர்ந்த கிரிராஜனை மு.க. ஸ்டாலின் களம் இறங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, மாநிலங்களவை எம்பியாக கிரிராஜனை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்தது அமைச்சர் சேகர்பாபுக்கு தெரியாது. இதனை பற்றி அவரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அண்ணா அறிவாலய வட்டாரங்கள் கூறியது, வட சென்னையை பொறுத்தவரை எந்த விஷயமாக இருந்தாலும் சேகர்பாபுவிடம் ஸ்டாலின் கலந்து ஆலோசிப்பார். ஆனால் சென்னை மேயர் தேர்தலில் ஏற்பட்ட பிரச்சினையால் ஸ்டாலினுக்கும் சேகர்பாபு நெருக்கத்தில் சற்று இடைவெளி ஏற்பட்டுள்ளது. சேகர்பாபு இடம் இதற்கு முன்பு போல் எல்லாவற்றையும் கலந்து ஆலோசிப்பது இல்லை. அதன்படி மாநிலங்களுக்கு கிரிராஜன் தேர்வு செய்தது குறித்து தொடர்பாக ஒரு வார்த்தை கூட கூறவில்லை. சேகர்பாபுக்கு எதிராக கிரிராஜனுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சர் சேகர்பாபுக்கு ஸ்டாலின் செக் வைத்துள்ளார் என்று கூறுகிறார்கள்.