Categories
மாநில செய்திகள்

நாடாளுமன்ற நிலைக்குழு இந்தி திணிப்பு…. ஆதங்கத்தை கொட்டி தீர்த்த வைகோ….!!!!

ஆட்சிமொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை தொடர்பாக வைகோ கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று இந்துத்துவ சக்திகள் கூப்பாடு போட்டு வருகின்றனர். இந்து ராஷ்டிரத்தை கட்டி எழுப்பி, ஒரே மொழி அது சமஸ்கிருதம் (அல்லது) இந்தி மொழி என்பதை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு, கட்டாயமாக திணிக்க முனைந்திருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையிலுள்ள தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சமஉரிமை வழங்கி, நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிடவேண்டும். இந்நிலையில்தான் நாட்டின் ஒருமைப்பாடானது நிலைக்கும். இல்லையென்றால் மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலை தான் இந்தியாவிலும் ஏற்படும். ஆகவே ஆட்சிமொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |