அதிபர் தேர்தலில் 219 வாக்குகள் பெற்று ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று அதிபராக பதவியேற்று கொண்டார்.
இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜினாமா செய்தாா். இதனை அடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றாா். இந்நிலையில், இலங்கையில் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலம் நேற்று நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் மொத்தம் உள்ள 223 வாக்குகளில் 219 வாக்குகள் பெற்று ரணில் விக்ரமாசிங்கே வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கே, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரா திசநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணப்பட்டதில், டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளும் மற்றும் அனுரா திசநாயக்க 3 வாக்குகளும் பெற்றனர். அதிகபட்சமாக 134 வாக்குகள் பெற்ற ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்று கொண்டார். இதனை அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கே எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.