கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 4 நாடுகளுடனான விமான சேவைக்கு சவுதி அரேபியா தடைவிதித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் ,ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. அதோடு இந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாட்டிற்குள் நுழையும் முன்பு கட்டாயம் தனிமைப்படுத்துதலில் உட்படுத்தப்படுவர் என்று அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி இந்த நாடுகளுக்கு சவுதி அரேபிய மக்கள் பயணிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தேவை இருக்கும் மக்கள் உயர் அதிகாரிகளின் அனுமதி பெற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கண்ட நாடுகளில் சவுதி அரேபியர்கள் யாரேனும் சிக்கியிருந்தால் இன்று இரவு 11 மணிக்குள் நாடு திரும்புவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த மே மாதம் 30ஆம் தேதி முதல் அமெரிக்கா ,ஜெர்மனி ,ஐக்கிய அரபு அமீரகம் ,சுவிட்சர்லாந்து உட்பட 11 நாடுகளிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு சவுதி அரேபியா நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.