புதிய நாடாளுமன்றம் வளாகம் கட்டும் திட்டத்தில் பிரதமருக்கான புதிய இல்லமும் கட்டப்பட உள்ளது. இப்போது டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 100 ஆண்டுகளை கடந்து விட்டதால் அதன் அருகிலேயே மிகவும் பிரம்மாண்டமான முறையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட பிரதமர் மோடி திட்டமிட்டார். அதன்படி டெல்லியில் ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பூமி பூஜை டிசம்பர் 10ஆம் தேதி நடந்தது.
ஆனால் உச்ச நீதிமன்றம் புதிய கட்டிடம் கட்ட தடை விதித்துள்ளது. இந்நிலையில் புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டும் திட்டத்தில் பிரதமருக்கான புதிய இல்லமும் கட்டப்பட உள்ளது. அதன்படி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பிரதமர் இல்ல கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என மத்திய பொதுப்பணித் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாடே கொரோனாவால் தவித்து வரும் பிரதமருக்கு புதிய வீடு தேவையா? என்று பிரியங்கா காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். நாடே ஆக்சிஜன் படுக்கை வசதி பற்றாக்குறையால் திணறிக்கொண்டிருக்கும் போது பிரதமருக்கு 13 கோடியில் புதிய வீடு கட்டுவதை விட அந்த பணத்தை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்துங்கள் என்று சூளுரைத்துள்ளார்.