Categories
சினிமா தமிழ் சினிமா

“நாடு உருப்படாது”…… அன்று சொன்னது இன்று உண்மையாயிடுச்சு….. ரஜினி பேசிய பழைய வைரல் வீடியோ…..!!!!

இலங்கை படுகொலையை கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னாள் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இலங்கையில் ஒவ்வொரு நாளும் நிலமை மோசமாகிக் கொண்டு வருகின்றது இன்று இரவு முதல் அங்கு ஊரடங்கு கடுமையாக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் வன்முறையிலோ அல்லது வீதிகளில் குழுவாக ஒன்றுபட வேண்டும் எனவும் இலங்கை காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகிய நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவி விலகாததால் இலங்கையில் கொழும்பில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் இலங்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கையில் போராட்டம் நடந்த போது தமிழகத்தில் நடிகர் சங்கம் சார்பில் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் தெரிவித்ததாவது: “இலங்கை மட்டுமல்ல ,எந்த நாடாக இருந்தாலும் பெண்கள்., குழந்தைகள், முதியவர்கள் என ஏழை மக்கள் வேதனை பட்டால் அந்த நாடு உருப்படவே உருப்படாது. இலங்கையில் பெண்களின் உதிரம் கொட்டுகிறது. அங்கு சாகும் மக்களின் பிணங்களை புதைக்கப்படவில்லை. விதைக்கப்படுகிறது.  நீங்கள் போராட்டத்தில் எல்லாரையும் அழித்தாலும், அந்த விதை நாளை வந்து உங்களை நிம்மதியாக வாழ விடாது” என்று ஆவேசமாக பேசி இருந்தார். தற்போது அது உண்மையாகியுள்ளது. இந்த வீடியோ இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

Categories

Tech |