தாய் மற்றும் மக்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் களம் இறங்கியுள்ளனர்.
கனடாவுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு தற்காலிக வெளிநாட்டு பணியாளராக எவாங்க்ளின் என்ற பெண்மணி சென்றுள்ளார். இவர் வேலையில் இருந்த போது 2 பேர் தன்னை துன்புறுத்தியதாகவும், தன்னிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் புகார் அளித்திருந்தார். இதனால் அவர்கள் தன்னை பழி வாங்குவதற்காக திருட்டு பழி சுமத்தியுள்ளதாக எவாங்க்ளின் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இந்த திருட்டு நடந்த போதுதான் கனடா நாட்டில் இல்லை என்றும், தான் ஒரு அகதி என்று விண்ணப்பிக்க உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் தான் இருப்பதாகவும் எவாங்க்ளின் கூறியுள்ளார். இந்நிலையில் திருட்டு பழி சுமத்தப்பட்டதால் எவாங்க்ளினை பிலிப்பைன்ஸ்க்கு நாடு கடத்துவதற்கு கனடா அரசு முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக எவாங்க்ளின் மற்றும் கன்னட குடிமகளாக பிறந்த அவருடைய மகள் மெக்கேன்னா இருவரும் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சமூக ஆர்வலர்கள் மற்றும் எவாங்க்ளின் நண்பர்கள் அரசுக்கு எவாங்க்ளின் மற்றும் அவருடைய உடல்நலம் சரியில்லாத மகள் 2 பேரையும் நாட்டை விட்டு வெளியேற்றக்கூடாது என ஒரு விண்ணப்பத்தை எழுதிஅனுப்பியுள்ளனர். இந்த விண்ணப்பத்தில் 2,000 பேர் கையொப்பமிட்டுள்ளனர். மேலும் இந்த பிரச்சனையில் மக்களின் அழுத்தம் காரணமாக அரசாங்கம் தலையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது