Categories
தேசிய செய்திகள்

“நாடு கடத்துங்கள்” அமித்ஷா அதிரடி உத்தரவு…. வெளியான தகவல்…!!!

ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் 100 சட்டவிரோத புலம் பெயர்வோரை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து நாடு கடத்துங்கள் என்று உளவுத்துறை அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில் உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில்,  நாட்டின் பாதுகாப்பு சூழல், பயங்கரவாதம், உலகளாவிய பயங்கரவாத குழுக்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், போதைப்பொருள் பயங்கரவாதம் உள்ளிட்டவை குறித்து விவாதம் செய்யப்பட்டது.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 100 சட்டவிரோத புலம்பெயர்வோரை அடையாளம் கண்டு கைது செய்து, அவர்களை நாடு கடத்துங்கள் என உளவுத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் சீக்கியர்கள், கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு ஆளாவது அதிகரிப்பது பற்றி கண்காணிக்கும்படியும் அவர் கேட்டுகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |