Categories
அரசியல்

நாடு தழுவிய போராட்டம்…. விவசாய சங்கங்கள் அழைப்பு…. காங்கிரஸ் ஆதரவு…!!!

காங்கிரஸ் கட்சியானது புதுதில்லியில் போராடி கொண்டிருக்கும் விவசாய சங்கங்கள் விடுத்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்துள்ளதாக கூறியுள்ளது.

பாராளுமன்றத்தில் இயற்றப்பெற்ற 3ம்  வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் இடைக்கால தடை விதித்தது. இதற்கு முடிவு கொண்டுவர ஒரு குழுவையும் நியமித்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து தங்களது ஆதரவை காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் கௌரவ் வல்லாப் பேசுகையில், “செப்டம்பர் 27-ம் தேதி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கம் சார்பில் அமைதியான முறையில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறஉள்ளது. காங்கிரஸ் கட்சியிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள். மத்திய அரசானது கடந்த 9 மாதங்களாக போராடி வரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும் 3 வேளாண் சட்டங்களையும் அரசு கைவிட வேண்டும்” என பேசியுள்ளார்.

 

Categories

Tech |